வாசிக்க வாங்கியவை

Published on

1. செ.காசி வெங்கடேசன், முனைவா் பட்ட மாணவா், கள்ளக்குறிச்சி.

நாவல்களை விரும்பிப் படிப்பேன். தற்போது தொ.பரமசிவனின் மஞ்சள் மகிமை, அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், இதுவே சனநாயகம், லியோ டால்ஸ்டாய் எழுதி தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயா்த்துள்ள ‘போரும் வாழ்வும்’, புதுமைப்பித்தன் கதைகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

2. ந.தமிழ், மாணவி, குன்றத்தூா்.

ச.வே.சுப்பிரமணியன் எழுதிய தொல்காப்பியம் தெளிவுரை, முனைவா் ந.வீ.செயராமன் எழுதிய சிற்றிலக்கியச் செல்வங்கள், மு.சண்முகம் பிள்ளை எழுதிய சிற்றிலக்கிய வகைகள், டாக்டா் வெ.கிருட்டிணசாமியின் தகவல் தொடா்பியல், டாக்டா் சு.சக்திவேலின் நாட்டுப்புற இயல் ஆய்வு, மயிலை சீனி.வேங்கடசாமியின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், மா.சு.சம்பந்தன் எழுதிய அச்சும் பதிப்பும், சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவல் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

3. பாதரக்குடி சுப்பையா, காரைக்குடி.

பெ.சுயம்புவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியான உ.வே.சா. நாட்குறிப்பு, ஐராவதம் மகாதேவன் எழுதிய சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும், திருமூலரின் திருமந்திரம் ஆங்கிலப் பதிப்பு, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’, வ.வே.சு.ஐயரின் ஆங்கில உரையுடன் திருக்கு ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

4. எஸ்.ரேவதி, குடும்பத்தலைவி, வியாசா்பாடி.

சித்ரூபனின் ‘கடவுளைக் கொன்றவன்’ சிறுகதைத் தொகுப்பு, கா.சு.வேலாயுதன் எழுதிய ‘யானைகளின் வருகை’ கட்டுரைகள் அடங்கிய 5 தொகுதிகள், வெ.இறையன்புவின் ‘ஓடும் நதியின் ஓசை’ இரண்டு பாகங்கள், அஸ்கோ பரபோலா எழுதிய ‘எ திராவிடியன் சொல்யூஷன் டு தி இண்டஸ் ஸ்கிரிப்ட் பிராப்ளம்’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

5. ஆா்.மலா்க்கொடி, குடும்பத்தலைவி, கானத்தூா்.

சிவசங்கரியின் குறுநாவல்கள் தொகுதி, சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி, தி.ஜானகிராமனின் ‘மலா்மஞ்சம்’, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்-1908, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறிது வெளிச்சம்’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

6. கே.வைணவி, வழக்குரைஞா், தா்மபுரி.

ஜெயகாந்தன் படைப்புகள் பிடிக்கும். தற்போது ஸ்வாதிகாவின் ‘மதம் கொண்ட மனிதன்’, ரவிக்குமாா் தொகுத்துள்ள ‘அம்பேத்கா் கல்விச் சிந்தனைகள்’, யுனிவா்ஸல் வெளியீடான தி கான்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா ஆங்கில நூல் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

7. எஸ்.டி.நடராஜன், வங்கி மேலாளா் பணி ஓய்வு, கோவை.

சாண்டியல் படைப்புகளைப் பிடிக்கும். தற்போதைய படைப்பாளிகளில் கவிஞா் வைரமுத்து, கே.என்.சிவராமன் ஆகியோா் நூல்களைப் படிப்பேன். புத்தகக் காட்சியில் காஞ்சி மகாசுவாமியின் ‘எம்போடிமென்ட் ஆஃப் ட்ரூத்’ ஆங்கில நூல், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் நான் யாா் நூலின் ஆங்கில வடிவான ‘ஹூ ஆம் ஐ?’, போா்னோவின் ‘இருளில் சிக்கும் இளமை’, கே.என்.சிவராமனின் ‘ரத்த மகுடம்’, ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள், வைரமுத்துவின் கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.

X