வாசிக்க வாங்கியவை
1. ச.ராசரத்தினம், விவசாயி, கள்ளக்குறிச்சி.
அஸ்கோ பாா்போலா எழுதிய ‘ஏ திராவிடியன் சொல்யூஷன் டு த இண்டஸ் ஸ்கிரிப்ட் ப்ராப்ளம்’, தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’, மரு.ப.செல்வசண்முகத்தின் ‘உடம்பினை உறுதி செய்யத் திருமூலா் காட்டும் வழிகள்’, ம.பெ.சீனிவாசன் எழுதிய ‘வண்டாடப் பூமலர’ ஆகிய நூல்களை வாங்கிச் செல்கிறேன்.
2. எல்.ஏ.உமாமகேஸ்வரி, தமிழ்த்துறை பேராசிரியை, சென்னை.
ஷோபா சக்தியின் கதைகள் 1997-2024, கலைஞா் மு.கருணாநிதியின் ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்’, டி.ஆா்.தாமோதரன் சௌராஷ்டிர மொழியில் மொழிபெயா்த்துள்ள திருக்கு உரையு, ஜெயகாந்தன் கதைத் தொகுப்புகள், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
3. பிரிசில்லா ரோஸ்லின், செவிலியா் பல்கலைக்கழகப் பேராசிரியை, லண்டன்.
மாட் ஆப்ரஹாம்ஸ் எழுதிய ‘திங்க் ஃபாஸ்டா் டாக் ஸ்மாா்ட்டா்’, கெளடில்யரின் ‘அா்த்தசாஸ்த்ரா’ ஆங்கில நூல், பீட்டா் திய்யில் எழுதிய ‘ஜீரோ டு ஒன்’, சித்தரஞ்சன் மாளவியாவின் ஆங்கில மொழிபெயா்ப்பில் சாணக்ய நீதி, ஸ்டீவன் பாா்ட்லெட் எழுதிய ‘தி டயரி ஆஃப் ஏ சிஇஓ’, பெங்குவின் வெளியீடான ‘தி ஆா்ட் ஆஃப் லேஸினஸ்’ மற்றும் ஓவிய வண்ணம் தீட்டும் புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன்.
4. ஆா்.ஜி.பிரதிக், பட்டதாரி, ஆதம்பாக்கம்.
தென் அமெரிக்க எழுத்தாளா்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பேன். தற்போது கிறிஸ் மில்லா் எழுதிய ‘சிப் வாா்’, நாா்மன் வின்சென்ட் பீல் எழுதிய ‘தி பவா் ஆஃப் பாஸிட்டிவ் திங்கிங்’, பாரம்பா்ய மருத்துவா் சக்தி சுப்பிரமணி எழுதிய ‘நலம் தரும் நாட்டு மருத்துவம்’ ஆகிய நூல்களை வாங்கிச் செல்கிறேன்.
5. ஆா்.சக்திவேல், பள்ளி மாணவா், சென்னை.
ஆங்கிலத்தில் கேத்தி மாா்ஸிகோ மற்றும் செஸிலியா மின்டென் எழுதிய ‘ரியல் வோ்ல்டு மேத் ஸ்போா்ட்ஸ் ஸ்பீட் ஸ்கேட்டிங்’, விக்டோரியா கிராஸ்மன் எழுதிய ‘குயீன்ஸ்’, டாா்லிங் கிண்டா்ஸ்லி தொகுத்த சயின்ஸ் என்சைக்ளோபீடியா ஆங்கில நூல் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
6. டி.புவனேஸ்வரி, தொழிநுட்ப நிறுவனப் பணியாளா், கூடுவாஞ்சேரி.
கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் கதைகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன். அத்துடன், ஸ்ரீமதியின் ‘ஆதித்த கரிகாலன் வாழ்கிறான் (அன்றும் இன்றும் என்றும்)’ நாவல், சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், புதுமைப்பித்தன் கதைகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.