Enable Javscript for better performance
தமிழக பட்ஜெட்: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்- Dinamani

சுடச்சுட

    
    tamilnadu assembly

    2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    அதன் விவரம்
    * தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு.
    * பேரிடர் மேலாண்மைதுறைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு.
    * தமிழக காவல்துறைக்கு ரூ.8,876 கோடி ஒதுக்கீடு.
    * தீயணைப்புதுறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
    * உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு.
    * வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு.
    * நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு.
    * உயர்கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.
    • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 18,540 கோடி ஒதுக்கீடு.
    • பள்ளி கல்வித்துறை ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
    * எரிசக்திதுறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு.
    * போக்குவரத்துதுறைக்கு ரூ.2,716 கோடி ஒதுக்கீடு.
    * தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
    * சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.
    * ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
    * தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
    * இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.
    • மின்சார துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு.
    • தொல்லியல் துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு.
    • சிறைசாலைதுறைக்கு 392 கோடி ஒதுக்கீடு.
    • ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கீடு
    • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு. 
    • நீதி நிர்வாகத்துக்கு ரூ.1,403.17 கோடி ஒதுக்கீடு
    • மீள்வளத்துறைக்கு ரூ.1,229.85 கோடி ஒதுக்கீடு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai