Enable Javscript for better performance
தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

    By DIN  |   Published on : 14th February 2020 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilnadu assembly

    தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

    2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும். 

    அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai