Enable Javscript for better performance
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்: பட்ஜெட்டில் தகவல்

    By DIN  |   Published on : 14th February 2020 12:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tnassembly2

    நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம் இருக்கும் என்றும் தமிழக பொருளாதார வளர்ச்சியானது தேசிய பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெவிக்கப்பட்டுள்ளது.  

    அதேசமயம், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai