அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

2020 - 2021ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

சென்னை: 2020 - 2021ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அவையாவன,

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.64,208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும், புதிய தொழில் முனைவோரை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு
தூத்துக்குடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் ரூ.634 கோடிச் செலவில் கட்டப்படும்.
குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,033 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மட்டுமல்லாமல், பிற நகரங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com