முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

அதில், முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகளும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகளும் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்காக ரூ.3,099.77 கோடியும், முதல்வர் பசுமை வீடு திட்டத்துக்காக ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com