கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

புது தில்லி, டிச.18: கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மிக அதிக அளவில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் வந்துள்ளதைக் க
கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை
Published on
Updated on
1 min read

புது தில்லி, டிச.18: கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மிக அதிக அளவில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

கள்ள நோட்டுகளை பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகம் அரசை மேலும் கலவரப்படுத்தியுள்ளது.  

சமீபத்தில் நடைபெற்ற நிதி அமைச்சகம், பாதுகாப்பு துறை, உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கள்ள நோட்டு புழக்கம் மிகவும் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரூபாய் நோட்டுக்குத் தேவையான பொருள்களை அளிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கோடு, காந்தப் பகுதி, வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது நிறம் மாறுவது, மிக நுண்ணிய எழுத்து ஆகியன சேர்க்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10 லட்சத்துக்கு 8 நோட்டுகள் கள்ள நோட்டாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

2006-ம் ஆண்டில் ரூ. 8.39 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது 2008-ல் ரூ. 23 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் ரூ. 21.1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1,800 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 50 சதவீதம் உயர் மதிப்பிலான நோட்டுகளாகும். அதாவது ரூ. 100, ரூ. 500, ரூ. 1,000 மதிப்பிலான நோட்டுகள் பாதியளவுக்கு அச்சிடப்படுகின்றன. முன்னர் ரூ. 500 நோட்டுகளில் அதிக அளவு கள்ள நோட்டுகள் வந்தன. இப்போது ரூ. 1,000 கள்ள நோட்டுகள் அதிகம் அச்சிடப்படுவதாகத் தெரிகிறது. இந்த ஆண்டில் மிக அதிக அளவிலான கள்ள நோட்டுகள் ரூ. 1,000 நோட்டுகளாகும். இதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com