சென்னை, பிப்.11: கோவையைச் சேர்ந்த பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவின் ரெஸ்டோனிக் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தூங்குவதற்குத் தேவையான உபகரணங்களை பெப்ஸ் தயாரித்து இந்திய சந்தைக்கு அளிக்கும். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ரெஸ்டோனிக் அளிக்கும்.
மெத்தைகள் தயாரிப்பில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக ரெஸ்டோனிக் திகழ்கிறது. 1938-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் சிறந்த தயாரிப்புகளுக்கான விருதுகளை வென்றுள்ளது.
இந்நிறுவனத் தயாரிப்புகள் பல காப்புரிமை பெற்றுள்ளன. கோவையைச் சேர்ந்த பெப்ஸ் நிறுவனம் மெத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிப்புகளுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெறுவதற்கு ரெஸ்டோனிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.