சென்னை, பிப்.11: தமிழ் வர்த்தக் கூட்டமைப்பு சார்பில் ஏற்றுமதி இறக்குமதிக்கான சிறந்த சேவை விருது ஏ.எஸ். ஷிப்பிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக பொருள்களைக் கையாள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக இவ்விருது வழங்கப்படுவதாக வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விருதுகளை தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவிடமிருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அதுல் அகர்வால் பெற்றுக் கொண்டார். சென்னையில் நும்பல், தூத்துக்குடி மற்றும் கொல்கத்தாவிலும் அலுவலகங்களை அமைத்து இந்நிறுவனம் செயல்படுகிறது.