Enable Javscript for better performance
உற்பத்தி வரி, சேவை வரியைக் குறைக்க அசோசேம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    உற்பத்தி வரி, சேவை வரியைக் குறைக்க அசோசேம் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 04th December 2012 01:48 AM  |   அ+அ அ-   |    |  

    ASSOCHAM

    இந்திய தொழில் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் உற்பத்தி வரியையும் சேவை வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) வலியுறுத்தியிருக்கிறது.

    2013-2014 நிதி ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய நிதி நிலை குறித்து அசோசேமின் ஆய்வு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது வரி, வட்டி விகிதங்களில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அசோசேம் தலைவர் ராஜ்குமார் தூத் பேசியது:

    உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்த வருகிறது. மேலும் உலக அளவில் பொருளாதாரத் தேக்க நிலை உள்ளது. இந்நிலையில், உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மறைமுக வரி விதிப்புக் கொள்கைகளை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். உற்பத்தி வரியும் சேவை வரியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையான 8 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்பட வேண்டும். இப்போது 12 சதவீத அளவில் இருக்கிறது. உற்பத்தி வரியையும் சேவை வரியையும் குறைப்பதன் மூலம் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.  குறைந்த அளவிலேயே முதலீடுகள், மிக அதிக அளவில் நிலவும் பணவீக்கம் ஆகியவற்றால் தொழில் துறை மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மறைமுக வரி விதிப்பைக் குறைப்பதன் மூலம்தான் அதனை நிமிரச் செய்ய முடியும்.

    இந்திய தொழில் துறை பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பல நிலைகளில் உள்ள சிக்கலான மறைமுக வரிக் கொள்கையானது உற்பத்தி விலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பல நீண்ட வழக்கு விவகாரங்களுக்கும் வழி வகுக்கிறது. வீட்டு வசதிக் கடனைப் பொருத்தவரையில், தற்போது ரூ. 1.50 லட்சம் வரையுள்ள வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு உள்ளது. இதனை ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    kattana sevai