Enable Javscript for better performance
டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல்லால் பங்குச் சந்தையில் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல்லால் பங்குச் சந்தையில் முன்னேற்றம்

    By தினமணி  |   Published on : 02nd November 2012 01:29 AM  |   அ+அ அ-   |    |  

    sensex

    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியபோது சரிவு காணப்பட்டது. பின்னர் டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலைகள் உயர்ந்ததால் 56 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 18,561 புள்ளிகளானது. முன்தினம் பங்குச் சந்தையில் 75 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் 25 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 5,645 புள்ளிகளானது.

    டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.89 சதவீதமும், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை 4.89 சதவீதமும் உயர்ந்தன. விப்ரோ நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் அல்லாத பிற துறைகளின் வர்த்தகத்தைக் கைவிட முடிவு செய்ததால் அந்நிறுவனப் பங்கு விலை மிக அதிகபட்சமாக 3 சதவீதம் உயர்ந்தது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததும் குறியீட்டெண் உயரக் காரணமாக அமைந்தது. ஆசிய பிராந்தியத்தில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் நாடுகளின் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளின் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.

    மும்பை பங்குச் சந்தையில் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 20 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. ஸ்டெர்லைட், என்டிபிசி பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. எஞ்சிய 8 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 1,673 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,162 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 1,987 கோடி.

    kattana sevai