Enable Javscript for better performance
மும்பை பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி

    By dn  |   Published on : 10th November 2012 01:34 AM  |   அ+அ அ-   |    |  

    bse

    மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை கடுமையான சரிவு காணப்பட்டது.

    மொத்தம் 163 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,683 புள்ளிகளாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் 52 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,686 புள்ளிகளானது. எஸ்பிஐ பங்கு விலை 3.89 சதவீதம் சரிந்து ரூ. 2,156.25-க்கு விற்பனையானது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்கு விலைகள் தலா ஒரு சதவீதம் குறைந்ததும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    டாடா ஸ்டீல் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ. 363 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால் நிறுவனப் பங்கு விலைகள் 3.2 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. இதனால் புள்ளிகள் சரிவு தவிர்க்க முடியாததானது.

    முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்தம் 1,733 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,122 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 2,606 கோடியாகும்.

    kattana sevai