Enable Javscript for better performance
மார்ச் 31-க்குள் மீண்டும் 2ஜி அலைக்கற்றை ஏலம்: கபில் சிபல்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 31-க்குள் மீண்டும் 2ஜி அலைக்கற்றை ஏலம்: கபில் சிபல்

    By dn  |   Published on : 17th November 2012 12:05 AM  |   அ+அ அ-   |    |  

    Kapil-Sibal

    சமீபத்தில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் எடுக்கப்படாத பகுதிகளுக்கான புதிய ஏலம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நடைபெறும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

    2ஜி அலைக்கற்றைக்கு சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் தில்லி, மும்பை உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு ஏலம் கேட்கப்படவில்லை. இந்த இடங்களுக்கான புதிய ஏலத்தை இந்த நிதி ஆண்டின் முடிவுக்குள் நடத்துவதே மத்திய அரசின் நோக்கம் என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

    2ஜி அலைக்கற்றைக்கு சமீபத்தில் நடந்த ஏலத்தில் அரசு எதிர்பார்த்த அளவுக்கு விலை கிட்டவில்லை. குறைந்தபட்சமாக

    ரூ. 28 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ரூ. 9,407.64 கோடி மட்டுமே கிடைத்தது. தில்லி, மும்பை பகுதிகளுக்கு ஏலம் கேட்கப்படவில்லை.

    முன்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டினால் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என சி.ஏ.ஜி. தனது தணிக்கை அறிக்கையில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அந்த ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து செய்தது. அந்த அலைக்கற்றைக்கு இப்போது நடந்த ஏலத்தில் அதிக விலை கிட்டாததால், சி.ஏ.ஜி.யின் கணக்கு தவறு என காங்கிரûஸச் சேர்ந்த சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    சி.ஏ.ஜி. தெரிவித்த நஷ்டக் கணக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தொலைத் தொடர்புத் துறையை பாதித்துவிட்டது. ஆனால் அந்தப் பரபரப்பினால் வாடிக்கையாளர் பயனடையவில்லை என சிபல் கூறினார்.

    2ஜி ஏலத்தின் தோல்வியை காங்கிரஸ் கொண்டாடுகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    kattana sevai