Enable Javscript for better performance
மும்பை பங்குச் சந்தையில் ஆறாவது நாளாக சரிவு- Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் ஆறாவது நாளாக சரிவு

    By dn  |   Published on : 17th November 2012 12:06 AM  |   அ+அ அ-   |    |  

    bse

    மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 162 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது.

    தொடர்ந்து ஆறாவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத் தகுந்தது. வர்த்தக முடிவின்போது சென்செக்ஸ் குறியீட்டளவு 18,309 என்ற அளவில் நிலைத்தது. 7.45 சதவீதம் என்ற அளவில் உள்ள பணவீக்க நிலை என்பது மிகவும் அதிகம் என ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பா ராவ் புணேயில் கருத்து தெரிவித்தார்.

    பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் வட்டி விகிதத்தை சற்று உயர்வாக வைத்திருப்பதாக அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணவீக்கம் அதிகமாக உள்ளது என அவர் கூறியபோது நிறுவனங்களின் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என முதலீட்டாளர்கள் கருதினர்.

    மேலும், சமாஜ்வாதி கட்சி திடீரென்று மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்தக் காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்து வேகமாகப் பங்கு விற்பனையில் ஈடுபட்டதால் பங்குச் சந்தையில் நஷ்டப் போக்கு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை காலையில் சென்செக்ஸில் 18,563 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் மாலையில் வர்த்தகம் முடிவுற்றபோது 162 புள்ளிகள் சரிவைக் கண்டது. முப்பது முக்கிய நிறுவனங்களின் பட்டியலான சென்செக்ஸில் இடம்பெற்ற 24 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக நஷ்டம் அடைந்தன.

    டாடா மோட்டர்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, பி.எச்.இ.எல்., மாருதி சுஸýகி, எச்.டி.எஃப்.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை நஷ்டத்தை சந்தித்தன.

     

    தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 56 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டளவான நிஃப்டி வர்த்தக முடிவில் 5,574 என்ற அளவில் நிலைத்தது.

    kattana sevai