Enable Javscript for better performance
19,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    19,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

    By dn  |   Published on : 05th October 2012 12:02 AM  |   அ+அ அ-   |    |  

    bse

    வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டளவான சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.

    பொருளாதார சீர்திருத்தம் குறித்து மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகளின் எதிர்பார்ப்பில் மும்பை பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் நடைபெற்றது. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டின் அளவை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என மத்திய அரசு முடிவெடுக்கக் கூடுமென்ற செய்தி காலையிலிருந்தே இருந்து வந்த நிலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் 15 மாத கால அளவில் முதல் முறையாக சென்செக்ஸ் குறியீட்டளவு 19 ஆயிரத்தைக் கடந்தது. சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் 200 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்சமாக 19,107 புள்ளிகளைத் தொட்டது. 2011ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு மிக அதிகபட்சமான அளவு இதுதான்.

    மாலையில் வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 19,058 என்ற அளவில் நிலைத்தது. முந்தைய நிலையைக் காட்டிலும் இது 188 புள்ளிகள் கூடுதலாகும். முப்பது முக்கிய நிறுவனங்களின் பங்குப் பட்டியலில் 20 நிறுவனங்களின் பங்குகள் லாபம் பெற்றன. இவற்றில் அதிகபட்சமாக பி.எச்.இ.எல். (6.57 சதவீதம்) லாபம் பெற்றது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (2.93 சதவீதம்), டாக்டர் ரெட்டி (2.16 சதவீதம்), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (2.15 சதவீதம்) ஆகியவையும் நல்ல லாபம் பெற்றன.

    கடந்த நான்கு நாட்களில் சென்செக்ஸ் குறியீட்டளவில் 480 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை மொத்தமாகப் பெற்ற லாபத்தின் மதிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி என மும்பை பங்குச் சந்தையின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

     

    தேசிய பங்குச் சந்தை: வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டளவான நிஃப்டி 56 புள்ளிகள் உயர்ந்தது. 17 மாத காலத்தில் மிக அதிகபட்சமாக 5,800 புள்ளிகள் என்ற அளவை நிஃப்டி கடந்தது. வர்த்தக இறுதியில் 5,787 புள்ளிகள் என்ற அளவில் நிலைத்தது.

    kattana sevai