Enable Javscript for better performance
விஜய் மல்லையாவுக்கு கைது வாரண்ட்- Dinamani

சுடச்சுட

    

    விஜய் மல்லையாவுக்கு கைது வாரண்ட்

    By தினமணி  |   Published on : 12th October 2012 11:33 PM  |   அ+அ அ-   |    |  

    VijayMal

    கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா மற்றும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நான்கு இயக்குநர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் (என்.பி.டபிள்யூ.) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாதில் உள்ள விமான நிலையத்தைப் பராமரிக்கும் பணியை ஜிஎம்ஆர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு ரூ. 10.5 கோடி தொகை விமான நிலைய கட்டணமாக கிங்ஃபிஷர் செலுத்த வேண்டியுள்ளது. இத்தொகையை செலுத்தாததற்காக உள்ளூர் நீதிமன்றத்தில் ஜிஎம்ஆர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    ரூ. 10.5 கோடி தொகைக்காக கிங்ஃபிஷர் நிறுவனம் அளித்த நான்கு காசோலைகளும் உரிய பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து காசோலை மோசடி வழக்கில் இவர்கள் ஐவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் ஆஜராகாததால் இவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் இம்மாதம் 20ஆம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. இந்நிறுவனத்துக்கான லைசென்ûஸ புதுப்பிப்பது தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இத்தகைய சிக்கல்களுக்கு இடையே இப்போது ஜாமீனில் வெளி வரமுடியாத கைது வாரண்ட் சிக்கலிலும் நிறுவனத் தலைவர் சிக்கியுள்

    ளது நிறுவன செயல்பாட்டை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    kattana sevai