Enable Javscript for better performance
இபிஎப் வட்டி 8.6%- Dinamani

சுடச்சுட

    

    இபிஎப் வட்டி 8.6%

    By dn  |   Published on : 19th October 2012 11:56 PM  |   அ+அ அ-   |    |  

    epf

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎப்) வட்டி விகிதம் 8.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2012-13-ம் நிதி ஆண்டுக்கு இந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முந்தைய ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டியைவிட இது சற்று அதிகமாகும். கூடுதல் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதால் எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாது என்று இபிஎப்ஓ அலுவலகம் தெரிவித்துள்ளது.

    2010-11-ம் நிதி ஆண்டில் அதிகபட்சமாக 9.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே 8.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. செயல்படுத்தப்படாத கணக்குகளில் ரூ. 22 ஆயிரம் கோடி உள்ளது. இந்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி மூலம் 9 சதவீத வட்டியைஅளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய கணக்குகள் 3 ஆண்டுகளாக அதாவது 36 மாதங்களாக செயல்படுத்தப்படவில்லை. இத்தகைய கணக்குகளுக்கு வட்டி விகிதம் கணக்கிடுவதில்லை என கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

    kattana sevai