கடந்த சில நாள்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.176 அதிகரித்தது.
சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருவது, பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை இறங்கு முகமாகவே இருந்தது.
சென்னையில் திங்கள்கிழமை (செப்.21) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,499 ஆக குறைந்து, நண்பகலில் ஒரு பவுன் ரூ.19,992 விற்பனை செய்யப்பட்டது. பின்னர், மாலை சற்று அதிகரித்து பவுன் விலை ரூ. 20,040 ஆனது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.176 அதிகரித்து, மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.20,216-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.345 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 39,205 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.90 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.