Enable Javscript for better performance
தங்கம் விலை தொடர் சரிவு: ஒரு பவுன் ரூ.21,552-ஆக குறைந்தது- Dinamani

சுடச்சுட

    
    gold

    ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த 9 நாள்களுக்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,232 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சர்வதேச அளவில் தங்கம் விலை சரிவடைந்து வருகிறது. கடந்த வாரம் 1385 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1300 டாலர்களுக்கும் கீழே சென்றுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் காணப்படுகிறது.

    இதைத் தவிர தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், நாட்டில் பணப்புழக்கம் குறைந்து, ஆபரணங்களின் விற்பனையும் சரிவடைந்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    சென்னையில் வியாழக்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.336 குறைந்து, ரூ.21 ஆயிரத்து 552-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கமாக வெள்ளி விலையும் சரிவடைந்துள்ளது. சென்னையில் கட்டி வெள்ளி, கிலோவுக்கு ரூ.910 குறைந்து வியாழக்கிழமை ரூ.42 ஆயிரத்து 670-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):- ஆபரணத் தங்கம்

    ஒரு கிராம் 2,694

    ஒரு பவுன் 21,552

    ஒரு கிராம் வெள்ளி 45.70

    ஒரு கிலோ கட்டி வெள்ளி 42,670

     

    புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):- ஆபரணத் தங்கம்

    ஒரு கிராம் 2,736

    ஒரு பவுன் 21,888

    ஒரு கிராம் வெள்ளி 46.60

    ஒரு கிலோ கட்டி வெள்ளி 43,580

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai