Enable Javscript for better performance
தங்கம் விலை தொடர் சரிவு: 7 நாளில் ரூ.896 குறைந்தது- Dinamani

சுடச்சுட

    
    gold

    ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7 நாள்களுக்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.896 குறைந்துள்ளது.

    சர்வதேச அளவில் தங்கம் விலை சரிவடைந்து வருகிறது. கடந்த வாரம் 1,385 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், தற்போது 1,300 டாலர்களாக சரிவடைந்துள்ளது. இதைத் தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால், தங்க ஆபரணங்களின் விற்பனை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதாக வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    புதன்கிழமை விலை

    நிலவரம் (ரூபாயில்):

    ஆபரணத் தங்கம்

    ஒரு கிராம் 2,736

    ஒரு பவுன் 21,888

    ஒரு கிராம்

    வெள்ளி 46.60

    ஒரு கிலோ

    கட்டி வெள்ளி 43,580

    செவ்வாய்க்கிழமை விலை

    நிலவரம் (ரூபாயில்):-

    ஆபரணத் தங்கம்

    ஒரு கிராம் 2,749

    ஒரு பவுன் 21,992

    ஒரு கிராம்

    வெள்ளி 47.10

    ஒரு கிலோ

    கட்டி வெள்ளி 44,020

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai