Enable Javscript for better performance
அமுல் வருவாய் ரூ. 20,730 கோடியாக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    amul

    "அமுல்' பெயரில் பால் பொருள்களை விற்பனை செய்து வரும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ. 20,730 கோடி வருவாய் பெற்றதாகத் தெரிவித்தது.

    அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோடி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    குஜராத் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனத்தில் இணைந்துள்ள 17 மாவட்ட பால் கூட்டுறவு அமைப்புகளில் 32 லட்சம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.

    மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுற்ற நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 20,730 கோடியாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் வருவாய் 14.2 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் 50 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு பால் கொள்முதல் விலை 10% உயர்த்தப்பட்டது. அமுல் குழுமத்தின் அனைத்து உற்பத்திப் பொருள்களின் மூலமாகப் பெற்ற வருவாய் சுமார் ரூ. 29,000 கோடியாக உள்ளது. சர்வதேச அளவில் பால் பொடி, நெய் ஆகியவற்றின் விலை குறைந்ததால், அதன் மூலமான வருவாய் குறைந்தது. நுகர்வோர் பொருள்களின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்தது.

    தற்போது நாளொன்றுக்கு 230 லட்சம் லிட்டர் பாலை நிறுவனம் கையாண்டு வருகிறது. பால் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க, நாட்டின் பிற பகுதிகளில் ஆலைகள் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். அதன் மூலம் நாளொன்றுக்கு 320 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும். நடப்பு நிதி ஆண்டில் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிக்கும் என நம்புகிறோம். கூடுதலாக 1,000 சில்லறை விற்பனையகங்களை அமைத்து, நாடு முழுவதும் உள்ள அமுல் விற்பனையகங்களின் எண்ணிக்கையை 9,000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்துக்குத் தற்போதுள்ள மொத்த விலை விற்பனையாளர்கள் எண்ணிக்கை 4,800. இந்த ஆண்டு மேலும் 900 பேர் நியமிக்கப்படுவர் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai