Enable Javscript for better performance
எம்.எம்.டி.சி.யில் 15% பங்கு விற்பனை: ரூ. 800 கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    எம்.எம்.டி.சி.யில் 15% பங்கு விற்பனை: ரூ. 800 கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

    By dn  |   Published on : 17th April 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mmtc

    கனிம, உலோக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனமான எம்.எம்.டி.சி.யில் 15 சதவீதப் பங்கை விற்பதன் மூலம் ரூ. 800 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தின் தலைவர் வேத் பிரகாஷ் புது தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

    எம்.எம்.டி.சி.யில் மத்திய அரசு தற்போது 89.93 சதவீத அளவுப் பங்கு உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இந்திய பங்கு-பரிவர்த்தனை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, எம்.எம்.டி.சி.யில் அரசின் பங்கைக் குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, நிறுவனத்தில் 15 சதவீதப் பங்கு விற்பனை செய்யலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவில் நிர்வாகத்துக்கு எந்த விதமான ஆட்சேபமும் இல்லை என்றார் அவர்.

    முன்னதாக, 2013-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் 9.33 சதவீதப் பங்கை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 570 கோடியை மத்திய அரசு திரட்டியது. இந்த ஆண்டு இந்தியன் ஆயில், தேசிய அனல் மின் நிறுவனமான என்.டிபி.சி., பி.எச்.இ.எல்., நால்கோ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கில் சிறு அளவை விற்பனை செய்து ரூ. 41,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கிட்டிருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai