Enable Javscript for better performance
டி.சி.எஸ். லாபம் ரூ. 3,858 கோடி- Dinamani

சுடச்சுட

    
    tcs

    டாடா கன்ஸல்டன்ஸி ஸர்வீஸஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் குறைந்து ரூ. 3,858.20 கோடியாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது.

    ஓராண்டு பணிபூர்த்தி செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகை அளிக்க ரூ. 2,628 கோடி ஒதுக்கியதையடுத்து, நிகர லாபம் கடந்த ஆண்டின் நிலையைக் காட்டிலும் 27 சதவீதம் குறைந்தது.

    நான்காம் காலாண்டு நிதி நிலை குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் மேலும் தெரிவித்தாவது:

    டி.சி.எஸ். பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஓராண்டு பணிபூர்த்தி செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 24,219.80 கோடியாகும். இக்காலாண்டு நிகர லாபம் ரூ. 3,858.20 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் நிலையைக் காட்டிலும் நிகர லாபம் 27 சதவீதம் குறைந்துள்ளது.

    சராசரியாக உள்நாட்டு ஊழியர்களுக்கு 8 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள டி.சி.எஸ். ஊழியர்களுக்கு சராசரியாக 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

    நிறுவனத்தில் தற்போது சுமார் 3.3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நடப்பு நிதி ஆண்டில் புதிதாக 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai