Enable Javscript for better performance
கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.500 கோடி திரட்ட கார்பரேஷன் வங்கி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.500 கோடி திரட்ட கார்பரேஷன் வங்கி திட்டம்

    By DN  |   Published on : 27th January 2015 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    C25DCORP

    வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்யும் நோக்குடன் கடன் பத்திரங்களை கார்பரேஷன் வங்கி வெளியிட்டுள்ளது. கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 500 கோடி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வங்கியின் மூத்த அதிகாரியொருவர் புது தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்த விவரம்: சர்வதேச பேஸல் விதிமுறைகளுக்கு உள்பட்ட, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை கார்பரேஷன் வங்கி வெளியிட்டுள்ளது. கூடுதல் டியர்-1 ரகத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள், வங்கியின் அடிப்படை மூலதனமாக கருதப்படும். நிதி நெருக்கடி சந்தர்ப்பங்களில் பங்குகளாக மாற்ற வாய்ப்புள்ளது.

    இந்தக் கடன் பத்திரங்கள் இப்போது விற்பனையில் உள்ளன. இதன் முகவிலை ரூ. 10 லட்சமாகும். இந்தக் கடன் பத்திரங்கள் 9.51 சதவீத வட்டியைப் பெற்றுத் தரும். இந்தப் பத்திர முதலீட்டுக்கு வரி விதிப்பு உண்டு. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை இது விற்பனையில் இருக்கும். இந்தக் கடன் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    பொதுத் துறை வங்கிகள், வங்கிச் செயல்பாடுகளுக்கான சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற, ரூ. 2.4 லட்சம் கோடி மதிப்பிலான மூலதனத்தை 2019-ஆம் ஆண்டுக்குள் திரட்ட வேண்டியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai