Enable Javscript for better performance
கோத்ரெஜ் புராபர்ட்டீஸ் லாபம் ரூ. 47 கோடி- Dinamani

சுடச்சுட

    
    godrej_properties

    வீட்டு வசதி நிறுவனமான கோத்ரெஜ் புராபர்ட்டீஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபமாக ரூ. 47.24 கோடியை ஈட்டியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

    இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஃபிரோஸ்ஷா கோத்ரெஜ் புது தில்லியில் தெரிவித்த விவரம்:

    நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 538.64 கோடியாக உள்ளது. அக்டோபர் - டிசம்பர் கால அளவில் விற்பனையில் 37 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. விற்பனையின் அளவு 7.01 லட்சம் சதுர அடியாகும். இதன் மதிப்பு ரூ. 548 கோடி. கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 428 கோடி மதிப்பில் 5.13 லட்சம் சதுர அடி விற்பனையானது. நான்காம் காலாண்டிலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து லாபகரமாக இருக்கும் என நம்புகிறோம்

    நிகர லாபமாக ரூ. 47.24 கோடியை ஈட்டியுள்ளோம். கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாப மதிப்பைவிட இது 26 சதவீதம் கூடுதலாகும்.

    தற்போது நாடு முழுவதும் 12 நகரங்களில், 10.4 கோடி சதுர அடி அளவில் எங்களது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீடுகள், வணிக வளாகங்கள், குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவை உள்படும் என்று அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai