சுடச்சுட

    

    அசோக் லேலண்டின் மே மாத விற்பனை 40.13% அதிகரிப்பு

    By புதுதில்லி,  |   Published on : 02nd June 2015 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    26

    இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மே மாத விற்பனை, கடந்த ஆண்டின் மே மாதத்தைவிட 40.13 சதவீதம் அதிகரித்துள்ளது.
     இதுகுறித்து மும்பை பங்கு வர்த்தக மையத்தில் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
     இந்த ஆண்டு மே மாதம், நிறுவனம் 9,294 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 6,632 வாகனங்களாக இருந்தது.
     அதனுடன் ஒப்பிடுகையில், இந்த மே மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 40.13 சதவீதம் அதிகரித்துள்ளது.
     முந்தைய ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த மே மாதத்தில் கனரக, நடுத்தர வர்த்தக வாகனங்களின் விற்பனை 41.11 சதவீதம் அதிகரித்துள்ளது.
     இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 37.41 சதவீதம் அதிகரித்துள்ளது என அசோக் லேலண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai