சுடச்சுட

    

    "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிகம் ரூ.44,985 கோடியை எட்டியது'

    By  தூத்துக்குடி,  |   Published on : 02nd June 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வணிகம் ரூ.44 ஆயிரத்து 985 கோடியை எட்டியுள்ளது.
     இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எச்.எஸ். உபேந்திர காமத் தூத்துக்குடியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
     2014-15ஆம் நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 13.06 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.44,985 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையில் 13.27 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.25,649.86 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
     கடன்களை பொறுத்தமட்டில் 12.79 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.19,335.95 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குத் தொகை வளர்ச்சியில் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் வங்கியானது குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குத் தொகையானது 15.89 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.5,037.15 கோடியாக உள்ளது.
     2014-2015ஆம் நிதியாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.8529 கோடியில் இருந்து ரூ. 9,564 கோடியாக உயர்ந்துள்ளது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40 சதவீதம் என்ற இலக்கைவிட அதிகமாக 54.92 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது.
     2014-2015ஆம் ஆண்டில் வட்டி வருமானம் ரூ.2702.65 கோடியில் இருந்து ரூ.2,835.53 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 4.92 சதவீதம் ஆகும். மேலும், இதர வருமானம் ரூ.291.90 கோடியாக உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டியானது கடந்த நிதி ஆண்டில் ரூ.1820.48 கோடியிலிருந்து ரூ. 1952.11 கோடியாக உயர்ந்துள்ளது.
     கடந்த நிதியாண்டில் மொத்தம் 60 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 430 ஆக உள்ளது. நிகழ் நிதியாண்டில் 75 புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன. மேலும், புதிதாக 220 ஏடிஎம் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை 1100-க்கு மேல் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
     மேலும், புதிதாக கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்காக தனி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் மொத்த வணிக இலக்கு ரூ.55,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வைப்புத் தொகை இலக்கு ரூ.30,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.24,400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த நிகர லாபம் இலக்கு ரூ.450 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai