சுடச்சுட

    
    25

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மே மாத வாகன விற்பனை 3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள நிலையிலும், நிறுவனத்தின் ஏற்றுமதி 40.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     கடந்த மே மாதம் நிறுவனத்தின் 36,706 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டின் மே மாதத்தில் நிறுவனம் விற்பனை செய்த 37,869 வாகனங்களோடு ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் குறைவு ஆகும்.
     உள்ளூர் சந்தையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டின் மே மாதத்தில் விற்பனையோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் மே மாத விற்பனை 6 சதவீதம் குறைந்துள்ளது.
     எனினும், 2014-ஆம் ஆண்டு மே மாதம் ஏற்றுமதியான 2,370 வாகனங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதம் ஏற்றுமதியான 3,337 வாகனங்கள் 40.8 சதவீதம் அதிகமாகும்.
     இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai