சுடச்சுட

    

    ராயல் என்ஃபீல்டு பைக்குகள்: மே மாத விற்பனை அதிகரிப்பு

    By புதுதில்லி,  |   Published on : 02nd June 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27

    பழம்பெருமை வாய்ந்த "புல்லட்' பைக்குகளைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த மே மாதம் தனது விற்பனை 41.35 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து மும்பை பங்கு வர்த்தக மையத்திடம் அந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     கடந்த மே மாதத்தில், நிறுவனம் 35,354 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தது.
     இது முந்தைய ஆண்டின் மே மாதத்தில் விற்பனையான 25,010 மோட்டார் சைக்கிள்களைவிட 41.35 சதவீதம் அதிகம் ஆகும்.
     உள்நாட்டில், கடந்த மாதம் 34,615 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ள நிறுவனம், முந்தைய ஆண்டின் மே மாத விற்பனையான 24,509 மோட்டார் சைக்கிள்களைவிட 41.23 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
     இந்த ஆண்டு மாதத்தில் 739 மோட்டார் சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்தது.
     முந்தைய ஆண்டின் மே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 47.5 சதவீதம் அதிகம் என நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai