Enable Javscript for better performance
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம் - Dinamani

சுடச்சுட

    

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம்

    By புதுதில்லி,  |   Published on : 03rd June 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    23

    கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பாளரான ஹூண்டாய், தனது புதிய "ஸ்போர்ட்ஸ்' வகைக் காரான "கிரெட்டா'வை இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து ஹூண்டாயின் இந்தியத் துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடட்டின் விற்பனைப் பிரிவு முதுநிலைத் துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
     கொரியாவிலுள்ள எங்களது வடிவமைப்புக் கூடத்தில் புதிய கிரெட்டா வகைக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     இந்தியத் தேவைக்கேற்ப கார்களை உருவாக்கும் வகையில், ஹைதராபாத், சென்னையிலிருந்து எங்களது பொறியாளர்கள் கொரியா சென்று, இந்தக் காரின் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தனர்.
     இதுவரை சான்டா எஃப்.ஈ., ஐ20 ஆக்டிவ் ஆகிய "ஸ்போர்ட்ஸ்' கார்களைப் போல் வடிவமைக்கப்பட்ட எங்களது கார் ரகங்கள் மூலம் ஸ்போர்ட்ஸ் கார் சந்தைப் பிரிவில் பங்கேற்று வந்தோம்.
     தற்போது "கிரெட்டா' ரகத்தின் மூலம், அந்தச் சந்தைப் பிரிவில் முழுமையாகக் களமிறங்கவிருக்கிறோம் என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai