சுடச்சுட

  
  24

  பொதுக் கடன் மேலாண்மை நிறுவனம் அமைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்துடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
   ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
   இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் பேசியதாவது:
   நிதி சார்ந்த எந்தக் கொள்கைகளாக இருந்தாலும், அது ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு எடுக்கப்பட்டால்தான் நல்லது. நாட்டின் நலன்கள் பாதிக்கப்படாமலும், எதிர்பார்க்கப்பட்ட லாபம் கிடைப்பதற்கு தடை இல்லாமல் இருப்பதுதான் ஒரு சிறந்த கொள்கையாக இருக்க முடியும்.
   நிதி தொடர்பான எந்த விவகாரத்தையும் ரிசர்வ் வங்கியின் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்வது அவ்வளவு புத்திசாலித்தனம் அல்ல.
   பொதுக் கடன் மேலாண்மை நிறுவனம் அமைக்க வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
   பொதுக் கடன் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது என்றார் ரகுராம் ராஜன்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai