சுடச்சுட

  

  ஹீரோ மோட்டோகார்ப்பின் சந்தைப் பங்கு 4 சதவீத வீழ்ச்சி

  By மும்பை,  |   Published on : 03rd June 2015 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், இரு சக்கர வாகனச் சந்தையின் வகித்து வந்த பங்கில் 4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
   இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
   இந்த ஆண்டின் மே மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 5,69,876 வாகனங்களாக இருந்தது. 2014-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 5.41 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் நிறுவனம் 6,02,481 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
   இதன் காரணமாக, முந்தைய ஆண்டின் மே மாதத்தைவிட, இந்த ஆண்டின் மே மாதம் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 4 சதவீதம் சரிந்துள்ளது என ஹீரோ மோட்டோகார்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai