சுடச்சுட

  

  அன்னிய முதலீடுகளைக் கவர கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை: மத்திய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

  By வாஷிங்டன்,  |   Published on : 05th June 2015 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2

  இந்தியாவில் பிறநாடுகள் வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு கூடுதல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
   இதுகுறித்து உலக வர்த்தக அமைப்பின் இந்திய வர்த்தக மறுஆய்வுக் குழு துணைத் தலைவர் கிறிஸ்டோஃபர் வில்ஸன் கூறியதாவது:
   அண்மைக் காலமாக அன்னிய முதலீடுகளைக் கவரும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
   வரிக் கொள்கை, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் நரேந்திர மோடி அரசு செய்து வரும் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.
   எனினும், அன்னிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
   விவசாயப் பொருள்களுக்கான விலைகளைக் குறைப்பது, விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்வற்கான கெடுபிடிகளை நீக்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வில்ஸன் கூறினார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai