சுடச்சுட

  

  இந்தியாவின் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துக்கு இருந்த 3.7 சதவீதப் பங்குகளை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
   இதுகுறித்து வால்வோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
   ஐஷர் நிறுவனத்தில் எங்களுக்கு இருந்த 10,05,610 பங்குகளை சுமார் ரூ.1,695 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம்.
   ஐஷரின் பங்குகளை விற்றதால், எங்கள் இருவருக்கும் இடையிலான "வி.ஈ. கமர்ஷியல் வெஹிக்கல்ஸ்' இணைவினை நிறுவனத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
   இந்த விற்பனையின் மூலம், வால்வோ இந்தியா நிறுவனத்திற்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுளது
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai