Enable Javscript for better performance
ரூ.1.35 கோடி விலையில் ஆர்.எஸ்.6 அவந்த்: அறிமுகம் செய்கிறது ஆடி- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1.35 கோடி விலையில் ஆர்.எஸ்.6 அவந்த்: அறிமுகம் செய்கிறது ஆடி

    By புதுதில்லி,  |   Published on : 05th June 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3

    ஜெர்மனைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது "ஸ்போர்ட்ஸ்' வகைக் காரான ஆர்.எஸ்.6 அவந்த்தை இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
     புதுதில்லியில் இந்தக் காரின் விற்பனையக விலை ரூ.1.35 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     இந்தியாவின் செயல்திறன் கொண்ட கார்களுக்கான சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் நிறுவனம் இந்தக் காரை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
     அடுத்த ஐந்து மாதங்களில், இந்தியாவில் ஐந்து புதிய ரகங்களை அறிமுகம் செய்வோம் என்று ஆடி நிறுவனம் கடந்த மாதம் அறிவித்திருந்ததற்கேற்ப இந்த கார் அறிமுகமாகியுள்ளது.
     நின்ற நிலையிலிருந்து 3.9 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொடக்கூடிய ஆர்.எஸ்.6 அவந்த் கார்கள், அதிகபட்சமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என ஆடி நிறுவனம் தெரிவிக்கிறது.
     புதுதில்லியில் இந்தக் காரை அறிமுகம் செய்து வைத்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோ கிங் கூறுகையில், ""துள்ளலான தோற்றம், அதிவேகம், சொகுசு ஆகிய இந்த மூன்றையும் விரும்பும் கார்ப் பிரியர்களுக்காக ஆர்.எஸ்.6 அவந்த் காரை அறிமுகம் செய்துள்ளோம்'' என்றார்.
     இந்த ஆர்.எஸ்.6 அவந்த், ஆடி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் நான்காவது "ஸ்போர்ட்ஸ்' வகைக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai