சுடச்சுட

  

  ஆராய்ச்சிக்கு அதிக முதலீடு: மருந்து தயாரிப்பாளர்களிடம் அரசு வலியுறுத்தல்

  By புது தில்லி,  |   Published on : 06th June 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  16


  இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
   இதுகுறித்து புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
   சந்தையில் புழங்கும் சாதாரண மருந்துகளைத் தயாரிக்கும் நாடாக மட்டும் இந்தியா இருக்கக்கூடாது.
   புதிய வகை மருந்துகளை, குறைந்த விலையில் தயாரிக்கும் மையமாக நமது நாடு உருவாக வேண்டும். அதற்கு, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும். தற்போது அத்தகைய நிறுவனங்கள், தங்களது மொத்த வருவாயில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக முதலீடு செய்து வருகின்றன.
   இந்த நிலை மாறி, நிறுவனங்கள் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தினால் அரசு அதற்கு ஆதரவு அளிக்கும் என்றார் அவர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai