சுடச்சுட

    

    இன்ஃபோசிஸ்: நிர்வாகம் சாரா தலைவராக ஆர். சேஷசாயி நியமனம்

    By புதுதில்லி,  |   Published on : 06th June 2015 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இயக்குநரவையில் நிர்வாகம் சாராத் தலைவராக அசோக் லேலண்டின் ஆர். சேஷசாயி நியமிக்கப்பட்டுள்ளார்.
     தற்போதைய நிர்வாகம் சாராத் தலைவரான கே.வி. காமத் பதவி விலகுவதையடுத்து, அந்தப் பதவிக்கு ஆர். சேஷசாயி நியமிக்கப்பட்டுள்ளார்.
     "பிரிக்ஸ்' நாடுகள் ஒன்றிணைந்து அமைத்து வரும் "புதிய வளர்ச்சி வங்கி'யின் தலைவர் பதவிக்கு கே.வி. காமத் பெயர் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிர்வாகம் சாராத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
     ஏற்கெனவே, இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இயக்குநரவையில் பங்கு சாரா உறுப்பினராக இருந்து வரும் ஆர். சேஷசாயி, அந்த நிறுவனத்தின் தணிக்கைக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்ஃபோஸிஸ் தவிர, அசோக் லேலண்டு நிறுவனத்தின் நிர்வாகம் சாரா துணைத் தலைவராகவும், இந்துஸ்-இந்த் வங்கியின் தலைவராகவும் ஆர். சேஷசாயி பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai