சுடச்சுட

    

    கடன்களுக்கான வட்டி விகிதம்: மேலும் இரு வங்கிகள் குறைப்பு

    By புதுதில்லி,  |   Published on : 06th June 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    19

    வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்ததன் எதிரொலியாக, பாரத மத்திய வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய இரு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கவிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தன.
     பாரத மத்திய வங்கி, கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் 0.3 சதவீதம் குறைத்து, 9.95 சதவீதம் ஆக்கியுள்ளது.
     சிண்டிகேட் வங்கியும், தனது கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைத்து 10 சதவீதம் ஆக்கியுள்ளது. இதற்கிடையே, பராடோ வங்கியும், ஓரியண்டல் வர்த்தக வங்கியும் தங்களது வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai