சுடச்சுட

    

    வாராக்கடன் சொத்துகள்: இணையம் வழியாக ஏலம் விடுகிறது எஸ்.பி.ஐ.

    By மும்பை,  |   Published on : 06th June 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17

    இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன்னிடமுள்ள வாராக்கடன் சொத்துகளை இணையம் வழியாக இந்த மாதம் 12-ஆம் தேதி ஏலம் விடவிருப்பதாக அறிவித்துள்ளது.
     ஏற்கெனவே, முதல் முறையாக கடந்த மார்ச் மாதம் இத்தகைய சொத்துகளை இணையம் வழியாக ஏலம் விட்ட பாரத ஸ்டேட் வங்கி, தற்போது இரண்டாவது முறையாக இந்த முறையைப் பின்பற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
     இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     வங்கியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்கள், இந்த மாதம் 12-ஆம் தேதி இணையம் மூலம் நடைபெறவிருக்கும் மாபெரும் ஏலத்தில் விற்பனைக்கு விடப்படவுள்ளன.
     வர்த்தக சொத்துக்கள், குடியிருப்பு வீடுகள் ஆகிய இரண்டு வகை சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும்.
     நாடு முழுவதிலும் 40 நகரங்களிலுள்ள அலுவலகங்கள், கடைகள், குடியிருப்புகள், தொழிற்சாலைக் கட்டடங்கள் இவற்றில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai