சுடச்சுட

    

    இணைய வழி ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம்: ஹெச்டிஎஃப்சி விரைவில் அறிமுகம்

    By புதுதில்லி,  |   Published on : 09th June 2015 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இணையம் மூலம் மட்டுமே சேர்வதற்கான ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.
     இதுகுறித்து அந்த நிறுவனத்தின் திட்டங்கள் பிரிவுத் துணைத் தலைவர் சுஜோய் மன்னா கூறியதாவது:
     புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தில், எங்களது வலைதளங்கள் வழியாக மட்டுமே சேர முடியும்."கிளிக் டு இன்வெஸ்ட்' இணைய சேவை போலவே இது முதலீட்டுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் (யுலிப்) ஆகும்.
     இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளோம்.
     விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைத்துவிடும் என்றார் அவர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai