சுடச்சுட

    

    உரிமங்கள் புதுப்பிப்பதில் சிக்கல்: சன் டி.வி. பங்குகள் விலை 22% வீழ்ச்சி

    By மும்பை,  |   Published on : 09th June 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பை பங்கு சந்தையில் சன் டி.வி. நிறுவனப் பங்குகளின் விலை திங்கள்கிழமை 22 சதவீதம் சரிந்தது.
     அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 33 தொலைக்காட்சி சேனல்களுக்கான உரிமத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து அந்த நிறுனத்தின் பங்குகள் சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
     திங்கள்கிழமை மிகக் குறைந்தபட்ச அளவாக அந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.258-ஆகக் இருந்தது.
     அந்த நிறுவனத்தின் பங்கு விலையில் 27.59 சதவீதம் குறைவான இந்த விலை, கடந்த 52 வாரங்களில் அதன் மிகக் குறைவான விலையாகும்.
     இறுதியில், ரூ.278.9 என்ற விலையுடன் அந்தப் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
     இது, அவற்றின் முகமதிப்பில் 21.7 சதவீதம் குறைவாகும்.
     தேசிய பங்கு சந்தையில், சன் டி.வி. நிறுவன பங்குகளின் விலை 21.8 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.278.65 ஆக நிறைவுற்றது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai