சுடச்சுட

  

  சோழ மண்டலம் எம்.எஸ். நிறுவனம்: பிரீமியம் வருவாய் ரூ.2,500 கோடி ஈட்ட இலக்கு

  By சென்னை,  |   Published on : 09th June 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனம் 2015-2016-ஆம் நிதியாண்டில் மொத்த பிரீமியம் வருவாயாக ரூ.2,500 கோடியை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
   இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.கோபாலரத்தினம் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தி: சோழ மண்டலம் எம்.எஸ்.பொதுக் காப்பீட்டு நிறுவனம் கடந்த 2014-2015-ஆம் நிதியாண்டில் மொத்த பிரீமியம் வருவாயாக ரூ.1,890 கோடி ஈட்டியுள்ளது. இதையடுத்து 2015-2016-ஆம் நிதியாண்டில் மொத்த பிரீமியம் வருவாயை ரூ.2,500 கோடியாக அதிகரிக்கவும், தமிழகத்தில் மட்டும் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.300 கோடியை ஈட்டவும் திட்டமிட்டுள்ளோம்.
   மேலும் கிராமப்புற மக்களின் நலன் கருதி விபத்து காப்பீடு, சுகாதாரம், கடல் வணிகம், சொத்துகள், விபத்தில் காயமடைதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் புதிய திட்டங்கள் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai