Enable Javscript for better performance
ஃபின்லாந்து நிறுவனத்தில் பங்கு முதலீட்டை அதிகரிக்கிறது மஹிந்திரா ஹாலிடேஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஃபின்லாந்து நிறுவனத்தில் பங்கு முதலீட்டை அதிகரிக்கிறது மஹிந்திரா ஹாலிடேஸ்

    By புதுதில்லி,  |   Published on : 10th June 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    24

    மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிஸார்ட்ஸ் இந்தியா நிறுவனம், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த "ஹாலிடே கிளப் ரிஸார்ட்ஸ்' நிறுவனத்தில் உள்ள தனது பங்கு முதலீட்டை 88 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
     இதுகுறித்து மும்பை பங்கு மாற்றகத்திடம் அந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     ஹாலிடே கிளப் ரிஸார்ட்ஸ் நிறுவனத்தில் தற்போது 23.3 சதவீதமாக உள்ள பங்கு முதலீட்டை 88 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
     அதற்காக 2.8 கோடி யூரோக்கள் (சுமார் ரூ.201 கோடி) முதலீடு செய்து, கூடுதலாக அந்த நிறுவனத்தின் 64.7 சதவீத பங்குகளை வாங்கவுள்ளோம்.
     இதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இந்தத் திட்டத்தை 2016-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிஸார்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai