சுடச்சுட

    

    குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே சேவை வரி: மத்திய அரசு விளக்கம்

    By  புது தில்லி,  |   Published on : 10th June 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் சேவை வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், குளிர் சாதன வசதி கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே அந்த வரி விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
     இது தொடர்பான விசாரணை ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     குளிர் சாதன வசதியோ, அறையை வெப்பப்படுத்துவதற்கான சாதன வசதியோ இல்லாத உணவு விடுதிகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
     அதாவது, குளிர் சாதன, வெப்பமூட்டும் சாதன வசதி கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே, சேவை வரி வதிக்கப்படும்.
     உணவு விடுதிகளின் சேவைக் கட்டணத்தில் 40 சதவீதத்துக்கு மட்டுமே அதிகரிக்கப்பட்ட சேவை வரி விகிதமான 14 சதவீதம் விதிக்கப்படும்.
     இது, மொத்த சேவைக் கட்டணத்தில் 5.6 சதவீதம் ஆகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
     புதிய சேவை வரி விகிதம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, அது 12.36 சதவீதமாகவும், மொத்த சேவைக் கட்டணத்தில் 4.94 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai