Enable Javscript for better performance
ஸெஸ்ட், போல்ட் கார்களை இலங்கையில் அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஸெஸ்ட், போல்ட் கார்களை இலங்கையில் அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ்

    By  புது தில்லி,  |   Published on : 10th June 2015 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    23

    இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது "ஸெஸ்ட்', "போல்ட்' ஆகிய கார் ரகங்களை இலங்கையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
     இலங்கையின் வாகனச் சந்தையில், தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த புதிய ரகங்களை அங்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியிருப்பதாகக்
     கூறப்படுகிறது.
     இலங்கையைச் சேர்ந்த டீசல் அண்டு மோட்டார் என்ஜினியரிங் நிறுவனத்தின் கூட்டுடன், இந்த இரு கார்களையும் அந்த நாட்டுச் சந்தையில் டாடா மோட்டார் அறிமுகப்
     படுத்தியுள்ளது.
     இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் சர்வதேச வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஜானி உம்மன் கூறியதாவது:
     இலங்கையிலுள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், இந்த புதிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
     புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரு ரகங்களும், தத்தமது பிரிவில் உள்ள மற்ற கார்களை விட அதிக அம்சங்களைக் கொண்டு முன்னணியில் திகழ்கின்றன என்று கூறினார்.
     சிறிய வகைக் காரான ùஸஸ்ட்டின் தொடக்க விலை, இலங்கை மதிப்பில் பெட்ரோல் ரகம் ரூ.28.1 லட்சமாகவும், டீசல் ரகம் ரூ.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     "ஹாட்ச்பேக்' ரகமான போல்ட் கார்களின் தொடக்க விலை, இலங்கை மதிப்பில் ரூ.22.99 லட்சத்தில் (பெட்ரோல் ரகம்) தொடங்குகிறது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai