சுடச்சுட

    

    "ஏர்பஸ்' விமானங்கள் வாங்க ஸ்பைஸ் ஜெட் திட்டம்

    By புது தில்லி,  |   Published on : 12th June 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17

    பயணிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக பிரான்ûஸச் சேர்ந்த "ஏர்பஸ்' விமானங்களை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
     2005-ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவையைத் தொடங்கியதிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளாக போயிங் நிறுவனத்தின் "பி787' ரக விமானங்களை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. குர்கானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், மொத்தமாக 35 விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இவற்றில் 20 விமானங்கள், "போயிங் 737' ரகத்தைச் சேர்ந்தவை. மற்றவை "பொம்பார்டியர் கியூ400' ரகத்தைச் சேர்ந்தவை. இந்த நிலையில், முதல் முறையாக அகண்ட வடிவுள்ள விமானத்தை ஈடுபடுத்த ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளது.
     தற்போதுள்ள இரு "போயிங் 737' ரக விமானங்களுக்குப் பதிலாக "ஏர்பஸ்' நிறுவனத்தின் "ஏ-320' விமானங்களைத் தருவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஸ்பைஸ் ஜெட் நிறுவன வட்டாரங்கள் புது தில்லியில் தெரிவித்தன.
     நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் 6 அல்லது 7 புதிய விமானங்களைப் பெறத் திட்டமிட்டிருப்பதாக ஸ்பைஸ் ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
     ஸ்பைஸ் ஜெட் நிறுவனர் அஜய் சிங், அந்த நிறுவனத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். கூடுதல் மூலதனமாக, ரூ. 1,500 கோடி செலுத்துவதாக அறிவித்திருந்தார். இதில் ஏற்கெனவே ரூ. 800 கோடியை அவர் செலுத்தியுள்ளார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai