சுடச்சுட

  

  முருகப்பா குழும நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 11% வளர்ச்சி

  By சென்னை,  |   Published on : 12th June 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  16

  முருகப்பா குழுமத்தின் மொத்த வர்த்தகம் கடந்த 2014-2015-ஆம் நிதியாண்டில் 11% வளர்ச்சி பெற்றுள்ளது.
   இது குறித்து முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவர் எம்.எம்.முருகப்பன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: முருகப்பா குழும நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் கடந்த 2013-14-ஆண்டில் ரூ.24,350 கோடியாக இருந்தது. இது 2014-2015-இல் 11% வளர்ச்சி பெற்று ரூ.26,926 கோடியாகவுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,627 கோடியிலிருந்து ரூ.2,921 கோடியாக உயர்ந்துள்ளது.
   கடந்த நிதியாண்டில் பருவமழை குறைவாக இருந்தபோதும் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களின் விற்பனை 12% வளர்ச்சி பெற்று 15.7 டன்னாக அதிகரித்தது.
   இதனால் நிகர விற்பனை முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13% வளர்ச்சி பெற்று ரூ.11,416 கோடியாக அதிகரித்தது. யூரியா 10.2 மெட்ரிக் டன் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
   ஈ.ஐ.டி.பாரி லிமிடெட் நிறுவனத்தின் 9 அலகுகளில் மொத்தம் 55 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 52 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. மின் உற்பத்தி, இதர பொருள்களின் விற்பனை அதிகரித்ததால் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 26% வளர்ச்சி பெற்றுள்ளது.
   டியூப் இன்வெஸ்மெண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் 8 சதவீதமும், சோழ மண்டலம் நிதி நிறுவனம் 13 சதவீதமும், சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனம் 2 சதவீதமும், குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் 5 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளன.
   கடந்த நிதியாண்டில் நெல் சாகுபடியை இயந்திரமயமாக்கும் கருவிகளை உற்பத்தி செய்யும் "யான்மார் கோரமண்டல் அக்ரி சொல்யூஷன்ஸ்' நிறுவனம் தனது இயந்திரங்களை சந்தைப்படுத்தத் தொடங்கியது. சோழமண்டலம் நிதி நிறுவனம் வணிக விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ. 500 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும் குழும நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், நவீனமயமாக்கவும் முதலீட்டுச் செலவாக ரூ.229 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai