சுடச்சுட

  

  "ரூ.6,000 கோடி கடன் திட்டம் சர்க்கரை உற்பத்தியாளர்களின் பிரச்னைக்குத் தீர்வாகாது'

  By சென்னை  |   Published on : 12th June 2015 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்க்கரை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 6,000 கோடி மதிப்பிலான கடன் திட்டம், அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வாகாது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (ஐ.எஸ்.எம்.ஏ.) தலைவர் ஏ.வெள்ளையன் கருத்துத் தெரிவித்தார்.
   சென்னையில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
   சர்க்கரை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, ரூ. 6,000 கோடி மதிப்பிலான கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கடனுக்கான ஓராண்டு வட்டியை அரசே செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எவ்வகையிலும் இது வட்டியில்லா கடன் திட்டம் அல்ல.
   ஓராண்டுக்குப் பிறகு ரூ. 6,000 கோடி கடனைத் திரும்பச் செலுத்த வேண்டுமானால், அந்தத் தொகையை சர்க்கரை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஓராண்டில் லாபமாக ஈட்ட வேண்டும். உற்பத்தியாளர்கள் கை வசம் ஒரு கோடி டன் சர்க்கரை உபரியாகத் தேங்கி உள்ள நிலையில், இது சாத்தியமல்ல. மேலும், தற்போது சர்க்கரையின் விலை உற்பத்தி விலையைவிட ரூ. 10 குறைவாக உள்ளது. கடன் அளிப்புத் திட்டம் அடிப்படைப் பிரச்னைக்குத் தீர்வாகாது.
   மத்திய அரசு அறிவித்துள்ள கடன் தொகையை உற்பத்தியாளர்களுக்கு அளிப்பதைவிட, சர்க்கரை கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகம், தேசிய வர்த்தக நிறுவனம் (எஸ்.டி.சி.) போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கலாம். அத்துடன், உற்பத்தியாளர்களிடம் உபரியாகத் தேங்கியுள்ள சர்க்கரையில் 25 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன் வரை இந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்யலாம்.
   இந்த வகையில், கரும்புக்கான நிலுவைத் தொகையும் செலுத்தப்படும், சர்க்கரைத் தேக்கம் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனித் தனி நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதைவிட, அரசு நிறுவனங்களுக்கு கடன் அளிப்பது எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையும் விரைவாகக் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai