சுடச்சுட

    

    என்.சி.டி.இ.எக்ஸ்.: "கோல்டு நௌ' டெலிவரி மையம் சென்னையில் தொடக்கம்

    By சென்னை,  |   Published on : 13th June 2015 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27

    பல்வேறு விவசாயப் பொருள்கள், உலோகங்களை இணையதளம் மூலம் பரிவர்த்தனை செய்யும் என்.சி.டி.இ.எக்ஸ். வர்த்தக மையம் தங்கம் வர்த்தகத்துக்கான பிரத்யேக டெலிவரி மையத்தை சென்னையில் தொடங்கவுள்ளது.
     இதுகுறித்து என்.சி.டி.இ.எக்ஸ். வர்த்தகப் பிரிவின் தலைவர் சுரேஷ் தேவ்நானி சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் மொத்த தங்கத்தை பயன்படுத்துவதில் தென்னிந்தியாவின் பங்களிப்பு 40% ஆகும். இதில் தமிழகத்தின் பங்களிப்பு 70% ஆகும். சென்னையில் தேசிய அளவிலான டெலிவரி மையம் தொடங்கப்படுவதன் மூலம் தென்னிந்தியாவின் நகை வர்த்தகம் வளர்ச்சி பெறும்.
     ஓராண்டாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மூன்று சர்வதேச நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பின்னர், சென்னையில் "கோல்டு நௌ' என்ற பெயரில் இந்த மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் வர்த்தகர்கள் ஒரு கிலோ, 100 கிராம் தங்கத்தை முன்பேர வர்த்தகம் ("ஃபார்வேர்டு கான்ட்ராக்ட்') செய்யலாம். இந்தியாவில் பொதுமக்கள், ஆலயங்கள், அறக்கட்டளைகளின் வசம் உத்தேசமாக 20,000 டன் தங்கம் எவ்வித புழக்கமும் செய்யப்படாமல் ஆபரணமாக முடங்கியுள்ளது. இதை திறம்பட பயன்படுத்தினால் உள்நாட்டில் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதை தவிர்க்கலாம் என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai